Breaking News

தேவதையின் விழிகள் 07

 
விழிகள்


       தியாவின் கைகளில் காபி கப்பைத் தினித்த அம்பிகா " இன்னக்கி காலேஜ் லீவு போட்டுடு உன்னை ஈவினிங் பொண்ணு பார்க்க வராங்க" என்று அறிவிப்பாக கூறியவள் அறையை விட்டு வெளியேறினாள் .


   இங்கு போலீஸ் ஸ்டேஷனில்...

மித்ரன் : " ராஜேஷ் இந்த கேஸ் டீடெயில்ஸ் சொல்லுங்க"

ராஜேஷ் : " சார் , இந்த பொண்ணு பேரு சாந்தி  . வயசு 25 , வயித்துல குழந்தையோட தூக்கு மாட்டிருக்காங்க, இவரோட பேமிலி டீடெயில்ஸ் கலெக்ட் பன்னிட்டு இருக்கம். இன்னும் கொஞ்ச நேரத்தில் கிடச்சிடும்"  

மித்ரன் : " ஓகே " என்று கூறி முடிக்கவில்லை. அவனது அறைக் கதவை" டமார் " என்ற சத்தத்துடன் திறந்து கொண்டு மித்ரனை முறைத்தவாறே உள் நுழைந்தான் ருத்ரன்.


         ருத்ரன் முறைத்துக் கொண்டிருக்க அவனை புன்சிரிப்புடன் பார்த்த மித்ரன் " என்ன மிஸ்டர் ருத்ரன் கோபமா இருக்கீங்க போல" என்று நக்கல் குரலில் கேட்டான். 


 ராஜேஷை வெளியே அனுப்பிய ருத்ரன் மித்ரனின் முதுகில் அடிக்க அவனை கட்டிக் கொண்ட மித்ரன் " ஒரு இம்போட்டன் கேஸ் டா மச்சான்.அதான் உன்னையும் இங்க ட்ரான்ஸ்வர் பன்ன வச்சேன்" என்றாள்.

ருத்ரன் : "சரி பிழைத்துப் போ " என்று கூற இருவரும் அமர்ந்து கேஸ் டீடெயில்ஸை ஆராய்ந்தனர்.


    அறைக்குள் அழுதழுது ஓய்ந்து போன தியா ஒரு முடிவு எடுத்தவளாய்  அஜய்கு போன் செய்தாள்.


 காலேஜ் லெக்சரரில் அமர்ந்திருந்த அஜயின் போன்


காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ

கண்ணில் உன்னை காணும் முன்னே மன்னில் ஒளிந்தாயோ🎶🎶


      ரிங்டோன் ஒலிக்க லெக்சரர் அவனை கடுமையாக முறைத்தார் 😡😡


 அஜய்  😁😁 பல்லைக் காட்டியவன்   " சார்ர் " இழுத்து ராகம் பாட  " கேட் அவுட் " அவ்விடமே அதிரும் படி கத்தினார் லெக்சரர்.


     இரண்டு முறை கால் வந்து கட்டாக மூன்றாவது அழைப்பில் முதல் ரிங்கிலே அதை ஏற்றவன் " சாரிடா செல்லமே இங்க வைரஸோட லெக்சரரில் இருந்தன்"  என்று கூற  மறு முனையில் தியாவின் விசும்பல் சத்தமே பதிலாக கிடைத்தது .


    அதில் அவன் காதல் மனம் துடிக்க " தி..தியா" தவிப்பாக அழைத்தான்.


".............."


அஜய் : " என்னாச்சு "


"..........."


 அஜய் :" தியா பேசு என்ன தான் ஆச்சு ஏன் அழுவுற "


"............"


அஜய் : " தியா  தியா "தியா " ம்ம்ம் " 


அஜய்: " அழாத இப்ப சொல்லு என்ன ஆச்சு என் செல்லத்துக்கு"


   அஜயின் கேள்விக்கு தான் கூற வந்ததை சிறு அழுகையுடனே கூறி முடித்தாள் தியா. 


அஜய்: " முச் பைத்தியக்கார தனமா பேசாத . நான் ஈவினிங் அங்க வந்து என் செல்லத்த எனக்கே குடுங்கன்னு கேட்குறேன் " என்று பலவாறு சமாதானம் கூறி போனை கட் செய்தான்.


     மாலை நான்கு மணிக்கு  அஜய் பார்க்கிங் ஏரியாவில் தனது புல்லட்டை ஸ்டார்ட் செய்ய அவனின் பின்னால் மறைத்தவாறு வந்த ஒரு உருவம் அவனின் தலையில் உருட்டுக் கட்டையால் அடித்து மயக்க மடையச் செய்தது. 


 இங்கு அஜய் கொடுத்த நம்பிக்கையில் தலையாட்டி பொம்மை போல சொல்வது அனைத்தயும்  செய்து கொண்டிருந்தாள் தியா .


 ஒரு குடோனில் நெற்றியில் வழிந்த இரத்தத்தோடு கண்களை மூடி ஒரு ஓரத்தில் சுருண்டிருந்த அஜயின் காதுகளில் எங்கோ ஒரு தூரத்தில்  " நீ எனக்கு இல்லன்னா நான் செத்து போய்டுவேன்"   என்ற தியாவின் ஆழு குரலே கேட்டுக் கொண்டிருந்தது.             விழிக்கும்...

✍️  Muhsina saththar

கனவுகளின் இளவரசி RS musha

நெல்லியகம பலாகல.

No comments