Breaking News

தேவதையின் விழிகள் 06...

 




விழிகள் 


      சூரியனின் மங்கலான ஒளி வீசிக் கொண்டிருக்க " இந்த பொண்ணால வெளியில தல காட்ட முடியல " என்று முனுமுனுத்த படி கோவிலை நோக்கி நடந்தாள் லட்சமி.


     இங்கு கோவிலில் கண்களை மூடியபடி வேன்டிக் கொண்டிருந்தாள் மித்ரனின் தாய் ராஜி.


       இதே சமயம் அர்ச்சகரும் தீபாராதனையுடன் வர  லட்சுமியும் ராஜியின் நேர் எதிரே நின்று கண்களில் நீரோடு வேண்டிக் கொண்டிருந்தாள்.


           கண்களில் தீபாராதனையை ஒற்றிக் கொண்ட ராஜி லட்சுமியின் கண்ணீரை துடைத்து விட்டாள். 

தனது கன்னம் உணர்ந்த ஸ்பரிசத்தில் கண் திறந்தாள் லட்சுமி.


  இரவு எட்டு மணிக்கு  மித்ரனின் ஜீப் சத்தம் வாசலில் கேட்க தனது மகனின் வரவை உணர்ந்த ராஜி டைனிங் டேபிளில் கைகளால் தலையை தாங்கியவாறு அமர்ந்து கொண்டாள்.

 

  வீட்டினுள் நுழைந்த மித்ரன் ராஜியை புருவம் சுருக்கி பார்த்த படியே தனது அறைக்கு சென்றவன்  பிரஷ் ஆகி வர அஜயும் வந்து டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டான்.


     ராஜியின் அருகில் வந்த மித்ரனின் " ராஜிமா உடம்புக்கு என்ன பன்னுது" என்ற கனிவான குரலில் " என்னப்பா சொல்ல சொல்ற நீயும் கால காலத்துல ஒரு கல்யாணத்த பன்னிகிட்டன்டா நானும் வீட்டு பொறுப்ப அவகிட்ட குடுத்துட்டு ஓய்வா இருப்பன்" என்று மித்ரன் அறியா வண்ணம் அஜயை பார்த்து கண் சிமிட்டினாள் .


அஜயும் "அம்மா  ஏதோ பிளான் பன்னிட்டு" என்று நினைத்தவன் " ம்மா நீ கவலைப்படாதே நான் கல்யாணம் பன்னிகிட்டு உன் கஷ்டத்தை  குறச்சிடுறன்"  என்றான்.


    தம்பியின் நக்கலில்" பக்" என்று சிரித்த மித்ரன் இன்னும் கல்யாணத்துக்கு என்ன அவசரம் என்றான்..

அஜய்: "அதானே" அண்ணனுக்கு ஒத்து ஊதினான்.

ராஜி : "இவன " என்று பற்களை கடித்து கொண்டு " இல்லப்பா மித்ரா உனக்கு நல்லது நடந்தா தான் அஜூக்கு நல்லது பன்னி பார்க்க முடியும்" என்று அஜய்கு சேக் வைத்தாள்.

 

 ராஜியின் பேச்சில் தியாவின் நினைவுகள் வந்து ஒட்டிக் கொள்ள அந்தர் பல்டி அடித்த அஜய் "  ஆமா அண்ணா அம்மாக்கு இப்பல்லாம் உன்னை நினச்சு தான் கவலை.  அம்மாக்கு உடம்புக்கு முடியாம போய்டும்" என்று வரவழைத்து கொண்ட சோகத்தோடு கூறினான். 

அஜயின் குரலில் வேறுபாட்டை கண்டு தாயின் முகத்தை பார்த்தான். ஏதும் செய்ய இயலாமல் "ஏதாச்சும் பன்னி தொலைங்க" கடுப்பில் கத்தி விட்டு சென்றான்.

            ( போலீஸா இருந்தும் இப்படி மக்கா இருக்கியே மாப்பு 🤣🤣)


அஜயிடம் ஹைபை கொடுத்த ராஜி கோவிலில் நடந்த வற்றை கூறினாள்.



கோவிலில்...


          லட்சுமியின் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து " எதுக்கு அழூறீங்க" என்று கேட்டாள் ராஜி.

 " ஏ பொண்ணுக்கு ஒரு வரன் அமைய மாட்டீங்கிது. பொட்ட புள்ளய வச்சி  வயித்துல நெருப்ப கட்டிகிட்டு இருக்கன்" என்றாள் லட்சுமி. 

     

    லட்சுமியின் கையில் இருந்த ஜாதகத்தையும் போடோ வையும் பார்த்து " அட லட்சுமி கடாட்சமா இருக்கா ,மித்ராக்கு பொறுத்தமா இருப்பா " என்று நினைத்த ராஜி" நானும் வரன் அமஞ்சா சொல்றேன் " என்று கையோடு அட்ரஸ் வாங்கி வந்ததை பெருமையாக கூறி முடித்தாள்.


அஜய்: " தூ..தூ... " என்று பாவ்லா காட்டியவன் தன் அறை நோக்கி ஓடினான்.


 கட்டிலில் படுத்து விட்டத்தை வெறித்த மித்ரன் சிந்துஜாவின் நினைவில் கண்ணயர்ந்தான்.


     இங்கு சிந்துஜாவும் காரணமே இல்லாமல் மித்ரனை அர்ச்சித்த படி தூங்கிப் போனாள்.



  கதிரவன் தனது ஆதிக்கத்தை பூமியில் வீசிக் கொண்டிருக்கும் அழகிய காலைப் பொழுதில் சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்தாள் தியா.


    கையில் காபியுடன் வந்த அம்பிகா ( தியாவின் தாய்) அவளது கையில் காபியை தினித்து விட்டு " இன்னக்கி காலேஜ் லீவு போட்டுடு உன்னை பொண்ணு பார்க்க வராங்க" என்று அவளின் சம்மதத்தை கேட்காது வெளியேறினாள்.


   கண்களில் கண்ணீருடன் செய்வதறியாது திகைத்து நின்றாள் தியா.



✍️ Muhsina saththar

கனவுகளின் இளவரசி  RS musha

நெல்லியகம பலாகல.

No comments