Breaking News

தேவதையின் விழிகள் 05

 


தேவதையின் விழிகள் 👁️👁️

       "  போலீஸ்னா உனக்கு ஏன்டி அவ்வளவு வெறுப்பு" என்ற தியாவின் கேள்விக்கு " ஏன்னா ஏன்னா அவனுங்களால நான் என்னோட ரித்திகாவ இழந்துட்டேன்" என்று விரக்தியில் கத்திய சிந்து பேன்ஜில் முகம் புதைத்து அழுதாள்.


      அவளது அழுகையில் கலங்கிய மனதை மறைத்து கொண்ட அஜய் " அப்படி என்னதான் ஆச்சு.நீ நினக்கிற மாதிரி எல்லாப் போலீஸும் கேட்டவங்க இல்லம்மா"  என்று சிறு முறைப்புடனே கூறினான்.

 சிந்து: " போலீஸ்னாலே கேட்டவங்க தான்  சொல்றேன். எனக்கு ஒரு பிரண்ட் இருந்தா,     சின்ன வயசுல இருந்தே நாங்க ரெண்டு பேரும் ஒன்னா தான் இருப்போம். அவளுக்கு அம்மா, அப்பா கிடையாது. ஆசிரமத்தில் தான் வளர்ந்தா . எங்களுக்கு ஒரு பன்னிரண்டு வயசு இருக்கும். அன்னைக்கு..


அன்று.....


   ரித்திக் காவும் சிந்துஜாவும் அன்று டியூசன் முடித்து  வந்து கொண்டிருந்த வேளையில் அடையாரில் உள்ள சிறிய பூங்காவில் கன் சூட் நடந்து கொண்டிருந்தது. அப்போது அதிலிருந்து தப்பிக்க ஒரு ரவுடி அவ்வழியே சிந்துவுடன் கை கோர்த்து சென்ற ரித்திகாவை இழுத்து கத்தியின் பிடியில் நிறுத்தினான்.


ரவுடி ( ரக்சன்) :  " யோ போலீஸு கன்ன கீழே போடு இல்ல இவ கழுத்த இங்கேயே அருத்துப் போடுவேன்.

 

சிந்து : "அண்ணா ப்ளீஸ்னா, உங்க தங்கச்சியா நினச்சு விட்ருங்க " அழுது கொண்டே கூறினாள்.   


ரித்திகா : " நீ போய்டு சிந் " என்று கூற " இல்லை நீ வராம நான் போ மாட்டேன்" என்று இவர்கள் பேசிக் கொண்டு இருக்க 

போலீஸ் ( விஹான்) : "டேய் ரக்சா உன்னை பிடிக்கிறதுக்கு ஆறு மாசமா காத்திருக்கன் இதமாரி சில்லி ரீஸனுக்கெல்லாம் நான் பின்வாங்க மாட்டேன்.நீ என்ன அவள போட்ரது நானே போடுறேன்" என்று கூறி ரித்திகாவை நோக்கி சுட்டான்.


கன்னின் தோட்டா ரித்திகாவின் இடது மார்பை துளைக்க  ரித்திகா :  " சிந்ந்ந்" என்ற அலறலோடு கிழே சாய்ந்தாள்.


    ரித்திகாவை ஒரு மனித ஜீவனாக கூட கண்டு கொள்ளாத விஹான் ரக்சனை அடித்து இழுத்து சென்றான்.


கீழே விழுந்து இருந்த ரித்திகாவை மடியில் தாங்கிய சிந்து " ரித்திகா என்ன பாருடி"  அழுதவாறே அவளது கன்னத்தில் தட்ட அவளது கையை இறுகப் பற்றியவாறு அவள் மடியிலே ரித்திகாவின் உயிர் பறவை பிரிந்து சென்றது .  


ஹாஸ்பிடலில்... 


    டாக்டர் : " அந்த பொண்ணு இறந்து இரண்டு மணி நேரம் ஆச்சு மா " என்று கூற   பெருங் குரலேடுத்து அழுத சிந்து அங்கு வந்த விஹானின் காக்கி உடையை பிடித்து" ஏன் சார் அவள கொன்னீங்க " என்று கத்த அவளது கையை தட்டி விட்டு விலகி நின்றவன்" அவள நான் சூட் பன்னலனாலும் அந்த ரவுடி அவள போட்றுபான். அவன கோட்ல ஒப்படைச்சா எனக்கு பிரமோசன், ஏன்னு கேட்க நாதியில்லாத இவள காப்பாத்தி எனக்கு என்ன யூஸ் " என்றவன் ரித்திகாவின் மெடிகல் சர்டிபிகேட்டை மாற்றி அமைக்க கூறி விலை பேசினான்.



               அனைத்தயும் கூறி முடித்த சிந்து "போலீஸ் காரன்கள பார்க்குறப்ப எல்லாம் அவ சிந்ந் னு கத்துனது கேட்டு கிட்டு இருக்கு  அஜய்"  என்று அதன் தாக்கம் இன்றளவும் சிறிது குறையாமல்  குலுங்கி அழுதாள்.


 அவளைத் தேற்றும் வகை அறியாது யாவரும் வெவ்வேறு மனநிலையில் கண் கலங்க அமர்ந்திருந்தனர்


 அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் டைனிங் டேபிளில் கைகளால் தாளம் தட்டியவாறு " அம்மா காபி " என்று கத்தினாள் பதினெட்டு வயது நிரம்பிய சுஜா.


 " இருடி வர்றேன். வரட்டும் அவ ரோட்டுல வம்பு பன்னிருக்கா . பக்கத்து அபார்ட்மெண்ட் ராஜம்   இதன் நீ பொண்ணு வளக்குற லட்சனம் என்று நக்கலா கேட்குறா டி "  அழுத கண்களை சேலைத் தலைப்பில் துடைத்தவாறு அடுக்களைக்குள் இருந்து காபி கப்புடன் வெளியே வந்தாள் லட்சுமி.


  சுஜா :  " அச்சோ என்ன ஸ்வீட்டி கண்ணுல தூசி விழுந்துடுச்சா " என்று கிண்டல் செய்தவாறே தாயின் கன்னத்தை துடைத்து முத்தம் பதித்தாள்.


லட்சுமி:"  ச்சு போடி வாயாடி. இந்தா காபி குடிச்சிட்டு கதவை சாத்திட்டு இரு .மனசு சரியில்லை கோயில் வரைக்கும் போயிட்டு வந்துடறேன். " என்று வீட்டிலிருந்து வெளியேறினாள். 


       இங்கு கோவிலில் கண்களை மூடியபடி வேன்டிக் கொண்டிருந்தாள் ராஜி.


     விழிக்கும்...


✍️ Muhsina saththar.

கனவுகளின் இளவரசி Rs Musha

நெல்லியகம பலாகல

No comments