Breaking News

தேவதையின் விழிகள் 04

 



அஜயின் தலையில் " "நங் " என்று கொட்டு விழ தலையை பரபரவென தேய்த்துக் கொண்டே நிமிர்ந்து பார்த்தான்.


           அங்கு அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் அவன் காதலி தியா.

நிமிர்ந்து பார்த்த அஜய் (M . voice ) : " இப்படி வந்து மாட்டிகிட்டியா.சமாளிடா இல்ல வகுந்துடுவா ராட்ஷஷி".

அவனைச் சுற்றி அமர்திருந்த நண்பர் பட்டாளம் நமுட்டுச் சிரிப்புடன் " என்ன மச்சான் ஆப் ஆயிட்ட " என்று கேட்க " டேய் கொஞ்ச நேரம் சும்மா இருங்களேன்டா" என்று முனுமுனுத்தான் அஜய்.


 முறைத்துக் கொண்டிருந்த தியாவை பார்த்து இரு கைகளையும் உயர்த்தி " சரண்டர்" என்று வெள்ளையாய் சிரித்தான்.

அவனது சிரிப்பினில் மனம் மயங்கினாலும் வெளியில் முறைத்தவாறு இருந்தாள் தியா.


 தியாவின் கைகளை மென்மையாக பற்றிய அஜய் அவளைத் தனியாக அழைத்துச் சென்றான்.

" எங்கடா அவள தனியா அழச்சி போற" என்ற நண்பர்களின் கூக்குரலில் செருப்பு காற்றில் மிதந்து வர வாயை மூடிக் கொண்டனர். 


     மரத்தின் மறைவில் அழைத்துச் சென்றவன் " என்னடி செல்லமே உனக்கு கோபம். பாரு மூக்கு செரிப்பழம் மாதிரி சிவந்து இருக்கு"என்று மூக்கை பிடித்து விட்டான்.

" என்னடா சொன்ன நான் அடுத்தவன சைட் அடிப்பனா"என்று மூக்கை உறிஞ்சிவாறே கேட்டாள் தியா.

அஜய் : " நான் உன்னை சொல்லல தங்கமே.உன்ன போய் அப்படி சொல்வேனா, எனக்கு தெரியாது நீ என்ன தான் சைட் அடிப்பன்டு.நான் அந்த இரண்டு வானரங்களச் சொன்னேன்" என்று பெரிதாய் கூறிச் சிரித்தான் .


   அவனது சிரிப்பினில் மயங்கிய தியாவும் மெலிதாக புன்னகைத்தாள். அவளது புன்னகையை ரசித்த அஜயின் காதல் மனம் அவளை கட்டியணைத்துக் கொள்ள கூறினாலும் நாகரிகம் கருதி அவளது நெற்றியில் பட்டும் படாமல் இதழ் ஒற்றி விளகிச் சென்றான்.


      கமிஷனர் அலுவலகத்தில்...


     மித்ரனின் மரியாதையை சிறு தலையசைப்பில் ஏற்றுக் கொண்ட கமிஷனர் வீர ராகவன்" ஹாய் யங் மேன் பிளீஸ் சிட் "என்று தனக்கு முன்னால் இருந்த இருக்கையை காட்டினார்.

மித்ரன் அவ்விருக்கையில் தோரனையாய் அமர்ந்ததும் அவனின் முன்னே ஒரு பைலை தூக்கிப் போட்ட வீர ராகவன்" லாஸ்டா கூட ஒரு மர்டர் கேஸ சூப்பரா ஹேன்டில் பன்ன.அதான் இதையும் ஒன்கிட்டயே குடுக்க சொல்லி மேலிடத்தில இருந்து ஆர்டர் " என்றார்.

" ம்ம் " என்று ஒற்றை தலையசைப்பில் முடித்துக் கொண்ட மித்ரனை பார்த்து " ஒன்கிட்ட அதிகமா பதில் எதிர் பார்த்தது என் தப்புத் தான் "என்று நினைத்த கமிஷனர்" அப்புறம் இந்த சின்ன வயசுல இவ்ளோ பெரிய ஜாப்.எப்ப கல்யாணம் " என்று கேட்டார்.

மித்ரன்: " சார் பெர்சனல் வேனாமே, ஒன்லி ப்ரபசனல்"என்று கூறி வெளியேறினான்.


           காலேஜ் கென்டினில் அமர்ந்து தருன், சக்தி அபிஷேக், அஜய், தியா என்று வரிசையாக அமர்ந்து அரட்டை அடித்து கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த இரு வானரங்களான சிந்துஜாவும் சரண்யா வும் வந்து சேர்ந்தனர்.

தியா : " எங்கடி லன்ச் டைம்ல இருந்து காணாம போய்டீங்க." 

தருன்: " யாரயாச்சும் சைட் அடிச்சுட்டு இருந்தீங்களா"

சிந்து: "நானே கடுப்புல இருக்கன் நீ வேற கலாய்க்குற " என்று எரிந்து விழுந்தாள் ‌.

"என்னாச்சு சிந்து ஏன் டென்ஷனா இருக்க "என்று கேட்டான் அஜய்.

அஜயின் கேள்விக்கு மதியம் பஸ் ஸ்டாப்பில் நடந்த சிறு கலவரத்தை கூறி முடித்தாள் சரண்யா. சரண்யா கூறியதை கேட்டு மற்றவர்கள் வயிற்றைப் பிடித்து கொண்டு சிரிக்க அஜய் மட்டும் அண்ணனுக்கு தப்பாத தம்பியாக " ஏன் சிந்து ஒரு சாரி சொல்லிட்டு வந்திருக்கலாம்ல, இவ்வளவு அரகன்டா பிகேவ் பன்னிருக்க." என்றான்.

நண்பனின் பேச்சில் தன் தவறை உணர்ந்த சிந்துஜா குற்ற உணர்ச்சியோடு தலையை குனிந்து கொண்டு " நான் தப்புன்னு புரியுது அஜய் அந்த நேரத்துல போலீஸ கண்ட கான்டுல அப்படி நடந்துக் கிட்டன்" என்றாள்.

தியா: "சரிடி, ஏன் உனக்கு போலீஸ்னா அவ்வளவு வெறுப்பு." 

அஜய் :" அதானே, போலீஸ் எல்லாரும் கேட்டவங்க இல்லம்மா " சிறு முறைப்புடனே கூறினான்.

சிந்துஜாவும் தனக்கு போலீஸ் பிடித்தமின்மைக்கான காரணத்தை கூறத் தொடங்கினாள்.


                   விழிக்கும்....


 


✍️ Muhsina saththar

கனவுகளின் இளவரசி Rs Musha

நெல்லியகம பலாகல.

No comments