தேவதையின் விழிகள் 03
விழிகள்
சரண்யாவின் கெஞ்சலைப் பொருட் படுத்தாத சிந்து " ஏன்டா ஈனப்பயலே பொண்ணுங்க உனக்கு இளக்காரமா போய்டாங்களா" என்று கையை முஷ்டியாக்கி அவனது மூக்கில் ஒரு குத்து விட்டாள்.அவர்களை சுற்றி சிறு கூட்டம் கூடியது.
அவ்வழியே கமிஷனர் ஆபிஸ் சென்ற மித்ரன் பஸ் ஸ்டாப்பில் கூடியிருந்த சிறு கூட்டத்தை கண்டு "வண்டியை ஸ்டாப் பன்னுங்க ரமேஷ் " என்று ஜீப்பில் இருந்து பாய்ந்து இரங்கி கூடியிருந்த சிறு கூட்டத்தை விளக்கியவாறே பக்கத்தில் சென்றவன் , மூக்கில் வழிந்த இரத்தத்தை துடைத்தவாறு மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்த புதியவனையும் கழுத்தில் சோலைச் சுற்றிய படி அவனுக்கு முதுகு காட்டி நின்ற பெண்னவளை கண்டு அதிர்ந்து போய் நின்றான்.
மித்ரனது பார்வையில் கூட்டம் விலகிச் செல்ல , சிந்துவிடம் திரும்பிய சரண்யா " போலீஸ் டி வா போய்டலாம் என்று கூறினாள்.
"இங்க என்ன பிரச்சினை" என்ற மித்ரனின் அதட்டலான குரலில் அவனை நோக்கி திரும்பிய சிந்துவின் காஜல் பூசிய விழிகளை கண்டவன் இமைக்க மறந்தான். கனவுகளில் அவனை இம்சித்த அதே விழிகள். நொடிக்குள் சுதாரித்து கொண்டு அவளை கேள்வியாக நோக்கினான்.
அவனது பார்வையை உணர்ந்த சிந்து " என்ன ஒரு பிரச்சினை நடந்தாலும் கரெக்டா இன்ட்ரி குடுக்கறிங்களே எப்படி சார் " என்று நக்கலாக கேட்டாள்.
அவள் விழி உருட்டி பேசிய அழகை ரசித்தாலும் அவளது நக்கலில் கோபம் கொண்டவன் இரத்தம் வழிய நின்ற புதியவனை தீயாய் முறைத்தான்.
அவனது பார்வையில் பயந்து நடுங்கி" சார் நா வேணும்டு பன்னல சார் அவங்க கவனிக்காம வந்து அதுக்குள்ள விழப் பார்த்தாங்க அதான் கைய புடிச்சு இழுத்தன் சார் " என்று தெரு ஓரத்தில் மூடப் படாதிருந்த சாக்கடையை நோக்கி கை நீட்டினான் அவன்.
சிந்துவிடம் திரும்பிய மித்ரன் " சேய் சாரி " என்றான்.
தோழியின் குனமறிந்து " இவளுக்காக நான் சாரி கேட்டுகிறேன் . சாரி அண்ணா " என்று மித்ரனிடம் தொடங்கி புதியவனிடம் முடித்தாள் சரண்யா .
புதியவன் விடைபெற்றுச் செல்ல தனக்கும் நேரமாவதை உணர்ந்த மித்ரன் பிரச்சினையை பெரிது படுத்த விரும்பாது " பார்க்க அமைதியான பொண்ணுங்களா தெரியுரீங்க. இப்படி ரூடா பிகேவ் பன்னாதிங்க.பப்ளிக் டிஸ்டர்ப் ஆவுது" என்று கூறிச் சென்றான்.
செல்பவனை சொடக்கிட்டு அழைத்த சிந்து "பார்க்க ஸ்மார்டா அழகா இருக்கிங்க. பட் உங்கள நான் லைப்ல சந்திக்கவே கூடாது போலீஸை பார்த்தாலே வெறுப்பா வருது " என்று கூறினாள்.
பதில் பேசாது "உனக்கு ஒரு நாளைக்கு இருக்குடி" என்று மனதில் கருவிக் கொண்டான்.
காலேஜில் மரத்தை சுற்றி கொண்டு நண்பர்களுடன் அமர்ந்திருந்த அஜய் " இவளுங்க எங்கடா போய்டாலுங்க . ஒரு மாலுக்கு போய்ட்டு வர இவ்ளோ நேரமா "
தருன் : "யாராச்சும் சைட் அடிச்சுட்டு இருப்பாங்க மச்சான் "
அஜய்: "நீ சொல்றது வாஸ்தவம் தான்டா அவங்க சைட் அடிச்சா தான் உண்டு .அவளுங்கள யாருடா சைட் அடிக்க போறா " என்று கூறிச் சிரித்தான்.
சிரித்தவன் தலையில் "நங்" என்று கொட்டு விழ தலையை பரபரவென தேய்த்துக் கொண்டே நிமிர்ந்து பார்த்தான்.
அவனை தீயாய் முறைத்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி.
விழிக்கும்...
ஸ்டோரி புடிச்சிருக்கா பிரண்ட்ஸ் . நான் இப்ப புதுசா தான் எழுதுரேன்.உங்க கமேன்ட்ஸ் தான் என்ன உ
ஊக்கப் படுத்தும்
✍️ Muhsina saththar
நெல்லியகம பலாகல.
No comments