Breaking News

தேவதையின் விழிகள் 02..

 

     

    ஸ்டேஷன் சென்றவன் தனது முகத்தை பாறையாக இருக்கிக் கொண்டு சலியூட் வைத்தவர்களுக்கு தலையசைப்பை மாத்திரமே பதிலாக கொடுத்தவன் தனது அறைக் கதவை திறந்தான்.நடுவில் உள்ள மேசையின் ஓரத்தில் ஏ.சி.பி மித்ரன் (T.P.S ) என்ற பெயர் பலகையை ஒரு கனம் பார்த்தவன் விரல்கள் தானாக மேலேழுந்து தனது மீசையை முறுக்கி கொண்டது.


     அவன் ஒரு காவல் அதிகாரி. அவனது ஓர் விழிப் பார்வையிலே ரவுடிகளை மண்டியிடச் செய்யும் ஆளுமை மிக்கவன்.அவன் ஏ.சி.பி யாக சார்ஜ் எடுத்துக் கொண்ட இரண்டு வருடங்களில் சென்னயில் குற்றங்கள் குறைத்துள்ளது என்பது மக்களின் அபிப்பிராயம்.

   அப்படிப் பட்டவன் சிந்தனையை ஆக்கிரமித்துக் கொண்டது என்னவோ அந்த இரு விழிகள் தான் 👁️👁️  எப்போதும் வரும் கனவு என்றாலும் இன்று ஏனோ அந்த விழிகள் அவனை பாடாய் படுத்தியது " ஐயோ கொல்றாளே யாருடி நீ " என்று மனதிற்குள் அரற்றியவன் கேஸ் பைல்களில் முயன்று தன் கவனத்தைச் செலுத்தினான் .


    மதியம்  பன்னிரண்டு மணியை கடக்க " ரமேஷ்" என்று கம்பீரமான குரலில் அழைத்தான் மித்ரன். " சார் " என்ற அழைப்பில் நிமிர்ந்தவன் ஸ்கூல் படிக்கும் குட்டி பையனின் முடியை போன்றிருந்த ரமேஷின் முடியை பார்த்து தாய் சொன்ன " சொட்டையன் " என்ற வார்த்தை நினைவில் வர அவனது இறுகிய முகத்தில் குறுநகை ஒன்று மின்னி மறைந்தது . அவனது புன்னகையை ரமேஷ்  "ஆ " வென்று வாயை பிளந்து கொண்டு பார்த்தான்  . தன்னை சட்டென சுதாரித்த மித்ரன் கடுமையான குரலில் " என்ன பார்வை வேண்டிக் கிடக்கு கமிஷனர் ஆபிஸ் போனும் வண்டியை எடுங்க" என்று கூற விட்டால் போதும் என்று வெளியேறினான் ரமேஷ்.


   சென்னையில் ஈ.சி.ஆர் ரோட்டில் ஒருத்தனின் ஷர்ட் காலரை கெட்டியாக பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள் ஒருத்தி 

     சாட் சாத் நம் கதையின் நாயகி தான்ங்க

  சிவந்த நிறத்தில் மெல்லிய கொடி போன்றவள்.மதி முகம்,ஐந்தடிக்கும் சற்றுக் குறைவான உயரம் . பிரம்மனின் அற்புதமான படைப்புகளில் ஒருத்தி . பார்ப்பதற்கு அமைதியான அப்பாவி பெண் போல காட்சியளிப்பாள்.ஆனால் அவளது குனம் அவளைப் படைத்த பிரம்மனுக்கே அத்துப்படி  


  " ஏன்டா என் கைய புடிச்சு இழுத்த " 

என்று கேட்ட சிந்துஜா ஓங்கி அவனது கன்னத்தில் அறைந்தாள்.பக்கத்தில் நின்ற அவளது தோழி சரண்யா " ஐயோ அடிச்சுட்டாளே என நினைத்து " வாடி போய்டலாம் சிந்து பிளீஸ் டி " என்று அழுவாத குறையாக கெஞ்சிக் கொண்டிருந்தாள்.


   அப்போது அவ்வழியே  கமிஷனர் ஆபிஸ் சென்ற மித்ரன் பஸ் ஸ்டாப்பில் சிறு கூட்டம் கூடியிருப்பதை கண்டு " வண்டியை ஸ்டாப் பன்னுங்க ரமேஷ் " என்றான்.


 அங்குள்ள கூட்டத்தை விளக்கியவாறே பக்கத்தில் சென்றவன் அங்கு கண்ட காட்சியில் அதிர்ந்து போய் நின்றான். 

              விழிக்கும் ...


  ✍️ Muhsina saththar ( RS musha )

No comments