Breaking News

🔴 துணிந்தெழு சஞ்சிகையின் இதயத்தோடு இரண்டு ஆண்டு பூர்த்தி விழா





ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் ஊடாக வரலாறு படைக்க இருக்கும் வைர நெஞ்சங்கள் எனும் மகுட வாசக்கத்தோடு ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படுகின்ற துணிந்தெழு சஞ்சிகை மிக வெற்றிகரமாக தன்னுடைய இரண்டாம் அகவையை பூர்த்தி செய்து மூன்றாம் அகவைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது.


இதயத்தோடு இரண்டு ஆண்டு எனும் மகுடம் சூடி கடந்த 30ஆம் திகதி இரண்டு ஆண்டு பூர்த்தி விழா வெகு விமர்சையாக zoom தொழில்நுட்பம் வாயிலாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர், புர்கான் பீ. இப்திகார் அவர்களுயும் கௌரவ அதிதியாக கல்ஹின்னா தமிழ் மன்றத்தின் பணிப்பாளர் எழுத்தாளர், கவிஞர், தேசமான்ய, தேசகீர்த்தி பவுமி ஹலீம்தீன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கிராத், தமிழ் தாய் வாழ்த்து, வரவேற்புரை, கவிதை, பிரதம மற்றும் கௌரவ அதிதிகளின் உரை, பாடல், தலைமை உரை பிரதம ஆசிரியர் உரை என நிகழ்வினை அழகாக ஒழுங்கமைய பெற்று, கலந்துகொண்ட அனைவரையும் வாழ்த்தி மனமார நன்றி கூறி நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தது.

இரண்டு ஆண்டுகள் நிகழ்நிலையில் ஒரு சஞ்சிகை சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றது என்பது பெரும் வெற்றியாக இங்கு பேசப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



No comments