கத்தார் ஃபீபா உலகக் கோப்பை 2022
உலகக்கோப்பை கால்பந்தை நடத்த கத்தார் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்திருக்கிறது. கால்பந்து உலகக்கோப்பை போட்டியை கடந்த முறை நடத்திய ரஷ்யா உலகின் மிகப்பரந்த பெரிய நாடு என்றால் அதற்கு நேர்மாறாக இந்த முறை வெறும் 180மீ சுற்றளவில் 23 லட்சம் மக்களே வசிக்கும் கத்தார் நடத்துகிறது. உலகக்கோப்பைக்கு ஒருமுறை கூட தகுதி பெறாத நாடு 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும் நாடு என போன்ற சவால்களை தாண்டி கடுமையாக போராடி இந்த அறிய வாய்ப்பை பெற்றுள்ள கத்தார் பணத்தை தண்ணீரை வாரி இறைத்து உலகமே வியந்து பறக்கும் அளவிற்கு பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்த மொத்தம் 8 அரங்குகளை கத்தார் தயார் செய்துள்ளன. அவற்றில் ஒன்று பழைய மைதானம் அது முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. மற்ற 7 மைதானங்களும் லட்ச கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களை கொண்டு அள்ளும் பகலும் வேலை செய்து புதிதாக கட்டப்பட்டவை.
ஸ்டேடியம் 974,
எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியம்,
அல் துமாமா ஸ்டேடியம்,
அல் ஜனுப் ஸ்டேடியம்,
அகமது பின் அலி ஸ்டேடியம்
ஆகிய 5 மைதானங்களிலும் 40,000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்க முடியும். கலீஃபா சர்வதேச அரங்கில் 45,416 ரசிகர்களும், அல் பேத் ஸ்டேடியத்தில் 60,000 ரசிகர்களும் நேரடியாக கால்பந்து ஆட்டங்களை பார்த்து ரசிக்க இயலும்.
அதிகபடச்சமாக 80,000 பேர் அமர்ந்து பார்க்க கூடிய லூசைல் ஸ்டேடியத்தில் தான் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டி நடைபெறும். நவம்பர் 21-ம் தேதி தொடங்கும் கால்பந்து உலகக்கோப்பை தொடர் 28 நாட்கள் நடைபெறுகிறது. 32 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் மொத்தம் 64 போட்டிகள் நடைபெறுகின்றன.
No comments