பலாங்கொடை கனகநாயகம் தமிழ் தேசிய கல்லூரியில் நடைபெற்ற இலவச செயலமர்வு.
...................
எதிர்காலத்தில் ஊடகத்துறையின் வளர்ச்சி பற்றிய விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் பலாங்கொடை கனகநாயகம் தமிழ் தேசிய கல்லூரியில் ஸ்கை தமிழ் ஊடகவலையமைப்பு மற்றும் சிறகின் மொழி இணைந்து நடாத்திய இலவச ஊடக செயலமர்வு நேற்று நடைபெற்றது.
இச்செயலமர்வினை ஸ்கை தமிழ் ஊடகத்தின் பிராந்திய முகாமையாளரும் துணிந்தெழு சஞ்சிகையின் இணை ஆசிரியருமான சிஹானா நௌபர் நடாத்தி வைத்தார். இச்செயல்அமர்வில் தரம் 06 தொடக்கம் 12 வரையான பாடசாலை ஊடகப் பிரிவை சேர்ந்த மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர்.
செயலமர்வானது பாடசாலையின் அதிபர் கே.ஷண்முகவேல் அவர்களின் தலைமையில், ஏ.எம்.ஐ.எப் முகம்மத், எம்.ஜே.எம் பிரோஸ் ஆகிய ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் ஊடகப் பிரிவு பொறுப்பாசிரியர் ஏ. எப் இர்பானா ஆசிரியர் அவர்களின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்றது.
எதிர்காலத்தில் தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைய ரீதியான பல திட்டங்களை ஸ்கை தமிழ் ஊடகவலையமைப்பு முன்னெடுக்கவுள்ளது.
அந்த வகையில் இலத்திரனியலோடு தொடர்பு பட்ட பல செயற்பாடுகள் பலரும் நன்மை அடையும் வகையில் விழிப்புணர்வு திட்டங்களோடு முன்னெடுக்கப்படும். E-Magazine,E-Paper,E-Book, QR Code System போன்ற தற்காலத்தில் பலரும் அறிந்து கொள்ள வேண்டிய இலத்திரனியல் துறையோடு சம்பந்தப்பட்ட பல விடயங்கள் பற்றிய தெளிவுகள் வழங்கப்படும்.
No comments