இலக்கியத்துறையிலும் கலைத்துறையிலும் பயணித்துக் கொண்டிருக்கக் கூடிய *என். நஜ்முல் ஹுசைன் *
*துணிந்தெழு விருது! 2022.*
இலக்கியத்துறையிலும் கலைத்துறையிலும் பயணித்துக் கொண்டிருக்கக் கூடிய
*என். நஜ்முல் ஹுசைன் * அவர்களுக்கு சிறப்பான முறையில் தன்னுடைய துறையில் பயணித்தமைக்காக ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை ஊடக வலையமைப்பின் ஊடாக *'துணிந்தெழு விருது 2022'* வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவர் 1967ம் ஆண்டு “சுஜாதா” எனும் தமிழ்-சிங்கள கையெழுத்துச் சஞ்சிகையின் தமிழ் பகுதி ஆசிரியராக இலக்கிய பிரவேசம் செய்த நஜ்முல் ஹுசைனின் முதல் ஆக்கம 1968ம் ஆண்டு தென்னிந்திய குமுதம் சஞ்சிகையில் வெளியாகியது.
மரபுக் கவிதை, புதுக்கவிதை என்று எழுதிக் குவித்துள்ளார். “பனித்தீ”, “இனிவரும் நாட்களெல்லாம்”, “நஜ்முல் ஹுசைனின் நட்சத்திரக் கவிதைகள்” எனும் தலைப்பில் இவரது கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன.
நேத்ரா ரி.வி. வசந்தம் ரி.வி, சுயாதீன தொலைக்காட்சி, இலங்கை வானொலி தமிழ்ச்சேவை, முஸ்லிம் சேவை, எப்.எம். 99, கனடா வானொலி, துபாய் வானொலி, தேசிய ரூபவாஹினி, சுயாதீன தொலைக்காட்சி(ஐ. ரி.என்) ,சக்தி, வசந்தம் ரி.வி., சங்கமம் துபாய் ரி.வி. போன்ற பல வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
பாடசாலை காலம் முதல் வானொலி முஸ்லிம் சேவையில் குரல் கொடுத்து வந்துள்ள இவர் “இளைஞர் இதயம்” எனும் ;நிகழ்ச்சியினை இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் நடாத்தி வந்துள்ளார்.
வானொலி, தொலைக்காட்சி கவியரங்குகளில் பங்கு பற்றி வருகிறார். இவரது மெல்லிசை பாடல்கள், இஸ்லாமிய கீதங்கள், வானொலி, தொலைக்காட்சிகளில் ஒலி, ஒளிபரப்பாகி வருகின்றன.
இவர் எழுதி பிரபல பாடகி இசைக்குயில் நூர்ஜஹான் மர்ஸூக் பாடிய இறுவட்டும், பிரபல பாடகர் கலைக்கமல் பாடிய இறுவட்டும் வெளிவந்துள்ளன. சங்கமம் துபாய் தொலைக்காட்சி நோன்பு மாதம் முழுவதும் இவர் எழுதி நூர்ஜஹான் மர்ஸூக் பாடிய “அமல் விளக்கேற்றி” என்ற இஸ்லாமிய கீத பாடலைக் கொண்டே தன் நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கலாபூஷணம் கவிமணி என். நஜ்முல் ஹுசைன் இப்போது தலைநகரில் வெற்றிநடை போடும் தமிழ்க் கவிஞர்களின் தேசிய அமைப்பான வகவம் எனும் வலம்புரி கவிதா வட்டத்தின் தலைவராக 2013 லிருந்து சிறப்புற பணியாற்றி வருகிறார்.
2011ல் மலேசிய கோலாலம்பூரில் இடம்பெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக் கவியரங்கில் இலங்கை சார்பாக கவிதை பாட தேர்ந்தெடுக்கப்பட்ட என்.நஜ்முல் ஹுசைன் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமையில் சிறப்புற கவிதை பாடி இலங்கை மண்ணுக்கு பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரச விருதான கலாபூஷணம் விருது பெற்றுள்ள இவர் 2002ம் ஆண்டு இலங்கை அரசின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் போது “படைப்பாளர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இவரது கவிதை பங்களிப்புக்காக அகில இன நல்லுறவு ஒன்றியம் இவருக்கு “கவிமணி” பட்டம் வழங்கியது.
கே.கே.எம். மொஹிதீன் சித்தி சௌதா உம்மா ஆகியோரின் புதல்வாரன இவர் பத்திகையாளரும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் தகவல் அதிகாரியாய் பணிபுரிந்த எழுத்தாளார், நூலாசிரியர் திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுசைனின் கணவருமாவார்.
இவரது ஏகப்புத்திரி சட்டத்தரணி திருமதி நூருஸ் ஷப்னா சிராஜுதீன் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்ட அதிகாரியாக பணி புரிந்து வருகிறார்.
No comments