Breaking News

ஊடகத்துறையிலும் இலக்கியத்துறையிலும் பயணித்துக் கொண்டிருக்கக் கூடிய *சமீஹா சமீர்*

 *துணிந்தெழு விருது! 2022.*



ஊடகத்துறையிலும் இலக்கியத்துறையிலும் பயணித்துக் கொண்டிருக்கக் கூடிய *சமீஹா சமீர்* அவர்களுக்கு சிறப்பான முறையில் தன்னுடைய துறையில் பயணித்தமைக்காக ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை ஊடக வலையமைப்பின் ஊடாக *'துணிந்தெழு விருது 2022'* வழங்கி கௌரவிக்கப்பட்டது

*அவர்களைப் பற்றிய சிறு அறிமுகம்.*

இவர் கெபிடல் மஹாராஜா நிறுவனத்தில் 2001 ஆண்டு தொலைகாட்சி ஊடக துறையில் சாதரண பயிற்சியாளராக இணைந்து கொண்டார்.

பின்னர் 2003 ல் இருந்து 2006 வரைக்குமான காலப்பகுதியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பபாளராகவும்,
2006 - 2007 வரையில் நிகழ்ச்சி நிர்வாகியாகவும்,
2007 - 2011 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செயலாளராகவும் செயற்பட்டார்.
அத்துடன் 2011 - 2014 வரையில் நிகழ்ச்சி முகாமையாளராகவும் சக்தி தொலைக்காட்சியில் கடமை புரிந்தார்.

பின்னர் 2015 - 2018 காலப் பகுதியில் UTV யில் சிரேஷ்ட நிகழ்ச்சி பொறுப்பாளராகவும்,
2019 - 2021 வரை பிறை தொலைக்காட்சியில் தலைமை நிகழ்ச்சி அதிகாரியாகவும் கடமை புரிந்தார்.

மேலும் இவர் கிழக்கிழங்கையின் முதல் முஸ்லிம் பெண் தொலைகாட்சி ஊடகவியலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
21 வருடங்களாக தொலைக்காட்சி ஊடகவியலாளராக கடமை புரிந்து வருகின்றார்.

Sri Lanka Muslim media forum இன் நிறைவேற்று உறுப்பினர் ஊடக உறுப்பினராகவும் ஊடக பயிற்சி தலைமை அதிகாரியாகவும் செயற்படுகின்றார்.

ஊடகத்தில் நிறைய பெண்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் பல ஊடக பயிற்சி வகுப்புக்களை இலவசமாக நடாத்தியும் வருகிறார்.

இன்று சுயாதீன ஊடகவியளாளராக தனது ஊடக துறையில் பயணித்து கொண்டிருக்கிறார்.

இன்னும் Diploma in journalism கற்கை நெறியை Colombo பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்திருந்தார். அதில் அவர் ' அதி விசேட சித்தியும் பெற்றிருந்தார்.

தற்போதும் எழுத்து துறையிலும் பயணித்து கொண்டிருக்கிறார். பத்திரிகைகளுக்கு பல விழிப்புணன்வு கட்டுரைகளையும் எழுதி உள்ளார்.

No comments