ஊடகத்துறையில் பயணித்துக் கொண்டிருக்கும் ரினோசா நௌஷாட்
*துணிந்தெழு விருது! - 2022.*
ஊடகத்துறையில் பயணித்துக் கொண்டிருக்கும் ரினோசா நௌஷாட் அவர்களுக்கு கலை மற்றும் ஊடகத் துறையில் அர்ப்பணிப்பான சேவையை வழங்கியமைக்காக ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை ஊடக வலையமைப்பின் ஊடாக "துணிந்தெழு விருது (2022 )" வழங்கி கௌரவிக்கப்பட்டது.
*அவர்களைப் பற்றிய சிறு அறிமுகம்.*
CGC Talk Shop என்ற youtube சேனல் மூலம் உலகம் பூராவும் பிரல்பயம் அடைந்துள்ளார்.
CGC ஊடகம் மூலம் பல வறிய மாணவர்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி
செய்துள்ளார்.
இளைஞர்களை
ஒன்றிணைக்கவும் ஊக்குவிக்கவும்
திறம்படுத்தவும் பேச்சால் முடியும்
என்பதால் பல ஊக்குவிப்பு
பேச்சுக்களை பேசியுள்ளதுடன்
தற்பொழுது யூடியூப் தளத்தில்
நேர்காணல்கள் செய்திகள் என பல
விடயங்களை செய்து
வருகிறார். மக்கள் பலரும் அவருக்கு ஆதரவை வழங்கி வருகின்றனர்.
ஊடகத்துறையில் உள்ள ஈடுபாட்டினால் 2012 ஆம் ஆண்டு இலங்கை தொலைக்காட்சி பயிற்சி கல்லூரியில் Dip in Media Studies கற்கை நெறி முடித்த கையோடு தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
U TV யில் தொலைக்காட்சியில்
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2021
வரை தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சி
வழங்குநராகவும் கடமையாற்றி வந்தார்.
2019 ஆம் ஆண்டு தொலைக்காட்சி அரச விருது வழங்கும் விழாவில் ஒரு புலனாய்வு தேடல் அறிக்கையில் தேசிய விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.
இவரின் சேவையை பாராட்டி இவ் விருதினை வழங்கி வைப்பதில் ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை பெருமிதம் கொள்கிறது.
No comments