ஊடகத்துறையில் பயணித்துக் கொண்டிருக்கும் ரஞ்சனி ராஜ்மோகன்
*துணிந்தெழு விருது! - 2022.*
ஊடகத்துறையில் பயணித்துக் கொண்டிருக்கும் ரஞ்சனி ராஜ்மோகன் அவர்களுக்கு கலை மற்றும் ஊடகத் துறையில் அர்ப்பணிப்பான சேவையை வழங்கியமைக்காக ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை ஊடக வலையமைப்பின் ஊடாக "துணிந்தெழு விருது (2022 )" வழங்கி கௌரவிக்கப்பட்டது.
*அவர்களைப் பற்றிய சிறு அறிமுகம்.*
ரஞ்சனி ராஜ்மோகன் அவர்கள் தொலைக்காட்சிகளில் தமிழ் அறிவிப்பாளராக, செய்திவாசிப்பாளராக, டப்பிங் கலைஞராக, ஒரு சிறந்த நடிகையாக இன்னும் பல துறைகளில் மிக நீண்டகாலமாக தனக்கென ஒரு இடத்தினை இன்றுவரை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
1989ஆம் ஆண்டு இலங்கை ரூபாவாஹினி தொலைக்காட்சியின் ஊடாக நாடகத்துறைக்குள் பிரவேசித்த இவர்
இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் தொலைக்காட்சி நாடகங்களிலும், 25க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், 30க்கும் மேற்பட்ட சிங்கள நாடகங்களிலும் நடித்துள்ளார்.
ஊடகத்துறையில் தனக்கென ஒரு தனியான இடத்தைப் பெற்றுள்ள இவர்
தொடர்ச்சியாக 2007, 2008, 2009ஆம் ஆண்டுக்கான சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான விருதை பெற்றுள்ளதோடு 2009ஆம் ஆண்டு சிறந்த தொகுப்பாளர், சிறந்த செய்தி வாசிப்பாளரென இரண்டு விருதுகளையும் பெற்றுள்ளார்.
மீண்டும் 2016ஆம் ஆண்டு சிறந்த தொலைக்காட்சி அறிவிப்பாளருக்கான விருதினையும் இவர் பெற்றுள்ளார்.
இவரின் சேவையைப் பாராட்டி ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை இவ்விருதினை வழங்கி வைப்பதில் பெருமிதம் கொள்கிறது.
No comments