Breaking News

'கரையோர வேர்கள்' கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு

ஸ்கை தமிழினால் முனீரா வாஹித் எழுதிய 'கரையோர வேர்கள்' கவிதை தொகுப்பு

நூல் வெளியீட்டு நிகழ்வு 2022.03.23 அன்று மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

இந் நிகழ்ச்சியினை அழகான முறையில்
ஸ்கை தமிழ் உறுப்பினரான பஹ்மா ஜவ்ஸி அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார்கள்.





அதே வேளை வரவேற்புரையினை சிறப்பான முறையில் நிகழ்த்திச் சென்றார் துணிந்தெழு ஆசிரியர் குழு உறுப்பினரான
கமறுன் நிஸாம்டீன் ​​​அவர்கள்.

பின்னர் தலைமையுரை நிகழ்த்தப்ட்டது. இதனை என்.எப். ஷிஹானா
சப்ரகமுவ மாகாண ஒருங்கிணைப்பாளர் சிறந்த முறையில் வழங்கிச் சென்றார்.

பின் ஸ்கை தமிழ் உறுப்பினரான ஆசிரியர்,எழுத்தாளர் அநூராதபர மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
இம்தியாஸ் சாஹுல் அவர்களால் ஸ்கை தமிழ் உறுப்பினர் உரை இடம் பெற்றது.

அதனையடுத்து சிறப்பு அதிதி உரையை
பெண் எழுத்தாளர்
நிந்தவூர் முஜாமலா அவர்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களுடன் நிகழ்த்தியிருந்தார்.

கௌரவ அதிதியின் உரையானது, எழுத்தாளர்,
மகளிர் செயலக உத்தியோகத்தர் பிரதேச செயலகம் காரைதீவினை சேர்ந்த மோகன் ஜெனீதா அவர்கள் சிறப்பான பல கருத்துக்களோடு நிகழ்த்திச் சென்றார்.

பின்னர் அக்கினிச் சிறகுகள் துணையாசிரியர் அறூபா அஹ்லா சுருக்கமான முறையில் நிகழ்த்திச் சென்றார்.

அதன் பின்பு நூலாசிரியரின் 'கரையோரவேர்கள்' நூல் வெளியீட்டு வைக்கும் நிகழ்வு இடம் பெற்றது.
தொடர்ந்து நூலாசிரியர் உரையை முனீரா வாஹித் நிகழ்த்திச் சென்றார்.

பின் சிறப்பு அதிதியின் உரையை
கவிஞரும் எழுத்தாளருமான
சே. கார்கவி
இந்தியா நாகபட்டினத்தை சேர்ந்தவர் சிறப்பான கருத்துக்களுடன் நிகழ்த்திச் சென்றார்.
பிரதம அதிதி உரையினை சிறந்த மூத்த கவிஞர்களுள் ஒருவரான
கலாபூசணம் ஏரூர்கவிக்கோ மற்றும் ஸ்கை தமிழ் கிழக்கு மாகண ஒருங்கிணைப்பாளாரான ஏ.ஸீ அப்துல் ரகுமான் அவர்கள் செம்மையான முறையில் வழங்கி உள்ளங்களை மகிழ வைத்திருந்தார்.

அதனை தொடர்ந்து ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பும் இளம் தலைமுறையினரும் என்ற தொனிப் பொருளுடன் சில காத்திரமான கருத்துக்களை ஸ்கை தமிழ் முகாமையாளரும் மீடியா நண்பருமான றொஸன் முஹம்மத் நிகழ்த்திச் சென்றார்.

இறுதியாக நன்றியுரை இடம் பெற்றது இதனை ஸ்கை தமிழ் உறுப்பினரும் துணிந்தெழு சஞ்சிகை நிர்வாகக் குழு உறுப்பினருமான தாரிக் முஹம்மத் அவர்கள் அழகிய தொனியில் நிகழ்த்திச் சென்றார்.

உங்கள அனைவருக்கும் ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு மற்றும் துணிந்தெழு சஞ்சிகை நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

*ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு*
*துணிந்தெழு சஞ்சிகை*
*நிர்வாகம்.*

No comments