Breaking News

சாள்ஸ் அன்டனி எழுதிய 'கவிதைக்காரன் நான்' கவிதை நூல் வெளியீட்டு விழா

ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு வெளியீட்டில்
சாள்ஸ் அன்டனி எழுதிய 'கவிதைக்காரன் நான்' கவிதை நூல் வெளியீட்டு விழாவில் இணைந்து பூரணமான பங்களிப்புக்களை  வழங்கிய அனைத்து நன்நெஞ்சங்களுக்கும் இதயபூர்வமான நன்றிகள்.


அத்துடன் நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் தேவி MD (ACU) அவர்களது இணைவில் மட்டில்லா மகிழ்ச்சி அடைவதுடன்,  மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


மற்றும் கௌரவ அதிதியாக பங்கேற்று நல்லுரையினை ஆற்றிய பைந்தமிழ் செம்மல் வீர மோகன் ஆசிரியர் (Dip in tech,BA,BED & MA.) அவர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்.

 

அத்துடன் மற்றுமொரு கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்து, நற்கருத்துக்களை பகிர்ந்து கொண்ட கனடா நாட்டைச் சேர்ந்த செய்தூன் சமூக அமைப்பின் தலைவி மற்றும் தொகுப்பாளர், கனடா மகளிர் குழு அங்கத்தவர் செய்தூன் நஹார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.


இந் நூல் வெளியீட்டு நிகழ்வினை இனிமையான குரலில் சிறப்பாக தொகுத்து வழங்கிய ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகைக்கான அனூராத புர மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஸீர் அஸ்ரா பானூ அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.

 

மேலும் இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் வரவேற்புரையை நிகழ்த்திச் சென்ற ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகைக்கான கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸஹ்பியா நஸார் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.


அத்துடன் Sky தமிழ் உறுப்பினர்களாக சிறப்பான உரைகளை  நிகழ்த்திய குருணாகல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

பாத்திமா சபா அவர்களிற்கும்,

ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை நிர்வாகக் குழு உறுப்பினர் C.M.U RJ தாரிக் அவர்களுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


இந் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு, எம் வேண்டு கோளுக்கிணங்க,  நேயர்களாக நூல் பற்றிய ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கிய இலங்கை மற்றும் ஏனைய நாடுகளிலிருந்தும் இணைந்து கொண்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமுவந்த நன்றிகள்.



இன்னும் இந்நூல் வெளியீட்டு நிகழ்விற்கு தலைமை தாங்கி, சிறப்பான முறையில் நடாத்துவதற்கு முன்னின்று செயற்பட்டு,நெறிப்படுத்தி ஒழுங்கு செய்த துணிந்தெழு சஞ்சிகை பணிப்பாளர், பிரதம ஆசிரியர் ஜெ.எம் பாஸித் அவர்களுக்கும் 

மிக்க நன்றிகள்.

மேலும் இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் முழுமையாக ஒத்துழைப்புக்களை வழங்கி செயற்பட்ட அனைத்து உள்ளங்களுக்கும்  நன்றிகள்.

No comments