Breaking News

அர்சிதா அமீர் எழுதிய "பத்து பக்கத்தில் மொத்த வாழ்க்கை" Free PDF Download

■ ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு வெளியீட்டில் அர்சிதா அமீர் எழுதிய "பத்து பக்கத்தில் மொத்த வாழ்க்கை"
நூல் வெளியீட்டு விழாவில் இணைந்து பூரணமான பங்களிப்புக்களை வழங்கிய அனைத்து நன்நெஞ்சங்களுக்கும் இதயபூர்வமான நன்றிகள்.

● அத்துடன் நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த கிழக்கு மாகாண Sky தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகைக்கான ஒருங்கிணைப்பாளராக
கடமையாற்றிக் கொண்டிருக்கும் பிரபல இலக்கிய ஆளுமை கலாபூஷணம் அப்துல் றகுமான் அவர்களது இணைவில் மட்டில்லா மகிழ்ச்சி அடைவதுடன், மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

● மற்றும் கௌரவ அதிதியாக பங்கேற்று நல்லுரையினையாற்றிய எழுத்தாளர் நாச்சியா தீவு பர்வீன் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

● மேலும் பல போதும் எம் தொழில் நுட்ப உதவியாளராக முன்னின்று செயற்படும் ஆசிரியர் குழு உறுப்பினரான
அஸ்ரா பானு அவர்களிற்கும் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளவோடு, இந் நூல் வெளியீட்டு நிகழ்வினை இனிமையான குரலில் அழகிய முறையில் சிறப்பாக தொகுத்து வழங்கிய Capital FM நடாத்திய அறிவிப்பாளர் போட்டி நிகழ்ச்சியில் சம்மாந்துறையில் இருந்து அகில இலங்கை ரீதியில் 3ம் இடத்தை பெற்ற ஸ்கை தமிழின் உறுப்பினர் Rj Thariq mohammeth அவருக்கும் உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

● அத்தோடு சிறப்பான முறையில் வரவேற்புரையை நிகழ்த்திய Sky தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகைக்கான திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளரான எச்.எம் ஹாஷிர் அவர்களுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

● இன்னும் இந் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு, எம் வேண்டு கோளுக்கிணங்க, நேயர்களாக நூல் பற்றிய ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கிய இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்தும் இணைந்து கொண்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமுவந்த நன்றிகள் அத்துடன் எம் நூல் வெளியீட்டு நிகழ்வுகளில் நேயராக கலந்து சிறப்பித்து ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கும் இந்தியாவை சேர்ந்த தற்போது குவைட்டில் வசித்து வரும் நேயர் ஏ.நிஷான் ஹலீம் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.

● இன்னும் இந்நூல் வெளியீட்டு நிகழ்விற்கு தலைமை தாங்கி, சிறப்பான முறையில் நடாத்துவதற்கு முன்னின்று செயற்பட்டு,நெறிப்படுத்தி ஒழுங்கு செய்த ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை பணிப்பாளர், பிரதம ஆசிரியர் ஜெ.எம் பாஸித் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.

● மேலும் இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு நன்றியுரையினை ஆற்றிய Sky தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகைக்கான அனுராதபுர மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஸீர் அஸ்ரா பானு அவர்களுக்கும் மனமுவந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

● மேலும் இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் முழுமையாக ஒத்துழைப்புக்களை வழங்கி செயற்பட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றிகள்.

அர்சிதா அமீர் எழுதிய ' பத்து பக்கத்தில் மொத்த வாழ்க்கை' நூலை பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் புத்தகத்தை பெற்றுக்கொள்ள இவ் இலக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
+97431060249










No comments