கொழும்பில் நடைபெற்ற Creative pool's முதலாண்டு நிகழ்வில் துணிந்தெழு சஞ்சிகை பற்றி அறிமுகப்படுத்தப்பட்டது.
(30.12.2021) கொழும்பு Elphistone அரங்கில் Creative Pool's முதலாண்டு நிறைவையொட்டி நடைபெற்ற நிகழ்வில் ஸ்கை தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை சார்பாக துணிந்தெழு சஞ்சிகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்குழுவிலிருந்து ஸஹ்பியா நஸார், எம். எப். எப். ஷிம்ரா, H.A ஹஸிமா பானு, M.A.F. முபஸ்ஸிரா, என்.எம்.முகம்மது மர்சூக், M.H.M சியாஜ், முஹம்மத் ஆதிப் ஆகிய 8 உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
இவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு மற்றும் துணிந்தெழு சஞ்சிகை பற்றிய முழுமையான தகவல்களை தெளிவான முறையில் விளக்கமாக அறிமுகம் செய்து வைத்தனர். இந் நிகழ்வில் இளம் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆளுமைகள் மற்றும் பிரபலங்கள் கலந்து சிறப்பித்துடன் இந் நிகழ்வினூடாக தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வரும் வாய்ப்பை பெற்றனர்.
No comments