Breaking News

நூல் விமர்சனங்கள் மூலம் சர்வதேச புகழ் பெற்ற நூலாசிரியர்களின் பாராட்டை பெற்று வரும் இலங்கை பூர்விகத்தை கொண்ட சிறுமி மர்யம் ஜெஸீம்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சாய்ந்தமருதை பூர்விகமாகக் கொண்ட ஒன்பதே வயதுடைய சிறுமி மர்யம் ஜெஸீம் பன்முக ஆளுமைகளை தன்னத்தே கொண்டவர் . தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். 

 

அண்மையில் இங்கிலாந்தில் உள்ள பிரபல சன்மார்க்க போதகர், பன்னூலாசிரியர் அஸ் ஷேய்க் ஆஸிம் கான் அவர்கள் எழுதி  டொய்ரிஸ் மீஆஹ்   அவர்களின் தயாரிப்பில் வெளியாகிய   சிம்பிள் சீராஹ்
(பெருமானார் முஹம்மது நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாறு  பற்றிய  நூல்) எனும் பெயரிலான நூலின் பொது வெளியீட்டுக்கு  முன்பான ‘விமர்சன செவ்வி நிகழ்வுக்கு’ அதி வயது குறைந்த நூல் விமர்சகராக விசேட அழைப்பை ஏற்று கலந்து கொண்டு அந்த நூல் பற்றிய  விமர்சனங்களை வழங்கி பாராட்டுக்களை பெற்று கொண்டதுடன் நூலாசிரியரின் கையொப்பமிட்ட விசேட நூல் பிரதிகளையும் பெற்றுக் கொண்டார்.

அத்துடன் , சென்ற ஒக்டொபர் மாதம் லண்டனில் நடைபெற்ற , உஸ்தாத் சாபிர் ஹசன் அவர்கள்  அல்குர்ஆனில்  உள்ள  சூராஹ் யூசுப் வழங்கும் படிப்பினைகளை வழி  காட்டியாக கொண்டு   அழகிய பொறுமை எனும் தலைப்பில்  எழுதிய  (பியூட்டிபுள்   பேசன்ஸ் ) நூல் வெளியீட்டு நிகழ்விலும் கலந்து கொண்டு  ‘“ சூரா யூசுப் ‘’ இன் ஆரம்ப  வசனங்களை ஓதி , அந்த நிகழ்வை ஆரம்பித்து வைக்க வாய்ப்பளிக்கப்பட்டதுடன்  அந்த நூல் பற்றிய விமர்சனம் மற்றும் சூரா யூசுப்  பற்றிய தப்ஸீர்  புதிர் போட்டியிலும் கலந்து கொண்டு  வெற்றி ஈட்டி நிகழ்வை சிறப்புறச்   செய்து பலரதும் பாராட்டை பெற்றுக் கொண்டதுடன் நூலாசிரியரின் கையொப்பமிட்ட விசேட நூல் பிரதிகளையும் பரிசாக பெற்றுக் கொண்டார்.

 

 

 

 

இது தவிர,   திறனாய்வு முஸ்லீம் துறையில் பல சர்வதேச விருதுகளை தன்வசமாக்கி 2014 இல் உலகின் 500 பெரும் செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியலில் இளம் வயதில் இடம்பிடித்தவவருமான தன்சானியாவை பூர்விகமாக  கொண்டு   தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வரும்  நூலாசிரியர்   முஹம்மது பாரிஸ் அவர்கள் எழுதிய 

திறனுள்ள  முஸ்லீம் என பொருள்படும்  "ப்ரொடக்ட்டிவ்  முஸ்லீம் " என்ற தலைப்பிலான   நேர முகாமைத்துவத்தை  , இஸ்லாமிய வாழ்வியலின் ஊடாக சிறப்பாக முன்னெடுப்பது பற்றிய பல்வேறு வழிகாட்டல்கள் மற்றும் தகவல்களை உள்ளடக்கிய பெறுமதிமிக்க நூலை , 

மர்யம் ஜெஸீம் தனது நான்கு வயது மட்டுமே பூர்த்தியாகிய நிலையில் தனது ஓய்வு நேரங்களில் தானாக ஆர்வம் கொண்டு படித்து அந் நூல்  பற்றிய நூல் விமர்சனத்தை தனது யு டியூப் தளத்தில் வெளியிட்டிருந்ததன் மூலம்  உலக பிரசித்தி பெற்ற நூலாசிரியர் முஹம்மட் பாரிஸ் அவர்களின் பிரத்தியேக வாழ்த்து செய்தியையும் பாராட்டுதல்களையும் பெற்றும் இருந்தார் .அதுமட்டுமன்றி , ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆதரவாளர்களை கொண்ட அவரது முகநூல் பக்கத்திலும் அதி  வயது குறைந்த ப்ரொடக்ட்டிவ்  முஸ்லீம் புத்தக ஆர்வலர் மர்யம் ஜெஸீம்  என குறிப்பிட்டு நூலாய்வு காணொளியை பகிர்ந்து ஆதரவு வழங்கவும் கேட்டிருந்தார் .

 

 

 இவைகள் தவிர , கடந்த ஆண்டுகளில் பிற பல சன்மார்க்க போதகர் முப்தி மென்க்   அவர்கள் வெளியிட்ட ‘“மோட்டிவேஷனல் மொமெண்ட்ஸ்”’ எனும் உத்வேகம் தரும் தருணங்கள்”’ மற்றும் உஸ்தாத் இசாக் ஜெசாட் அவர்கள் எழுதிய  ‘’அல் குர் ஆனை மனனம் செய்வதற்கான 365 உத்திகள்’’ அடங்கிய நூல்களின் விமர்சனங்களை செய்து நூலாசிரியர்கள் கவனத்தை ஈர்த்ததும் குறிப்பிடத்தக்கது.  



அத்துடன் , 2020 ஆம் ஆண்டில் திடீரென உருவான  கோவிட் நெருக்கடியால்  நாளாந்த செயற்பாடுகளும் பாடசாலைகளும் முடக்கப்பட்ட போது 

‘’எபிக்’’ நிறுவனமும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கிய இலத்திரனியல் நூலகத்திலிருந்து பாடசாலைகள் முடக்கப்பட்டு மீள் திறக்கப்பட்ட  ஐந்து  மாத காலப்பகுதிக்குள் 312 நூல்களை வாசித்தமைக்காக  எபிக் நிறுவனமும்  சான்றிதழ் வழங்கி பாராட்டி இருந்தது .

 

 


நூல் வாசிப்பில் அதி தீவிர கவனம் செலுத்தி வரும் மர்யம் ஜெஸீம் இரண்டு வயதில் இருந்தே  வாசிப்பு தொடர்பான ஊக்குவிப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டு சான்றிதழ்களையும் பதக்கங்களையும் தொடர்ச்சியாக பெற்று வந்துள்ளார் .

 

 

 

கடந்த ரமளானில், பிரபல இஸ்லாமிய தொலைக்காட்சி சேவை நிறுவனமான இஸ்லாம் சணல் நடாத்திய தேசிய கிராஅத் போட்டி தொடரில் வென்று   ஐக்கிய ராஜ்ஜியத்தின் ‘’அதி சிறந்த காரியாவாக மகுடம்’’ சூட்டப்பட்ட மர்யம் ஜெஸீம்  எதிர்காலத்தில் அல் குர்ஆனை மனனமிட்டு ‘’ஹாபிழாவாக’’ பரிணமிக்க முயற்சி எடுத்து வருகிறார் . 

 

சர்வதேச மற்றும் ,தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பல விருதுகளை பெற்றுள்ளார் . இங்கிலாந்து மற்றும் எகிப்தில் உள்ள இஸ்லாமிய தொலைக்காட்சி சேவைகளில் தொடர்ச்சியாக அழைப்பு ஓதுனராக பங்கு கொண்டு  தஜ்வீத் முறைப்படி ,அழகிய முறையில் அல்குர்ஆன் சூராக்களை ஓதி பிரபல சன்மார்க்க போதகர்கள் , காரிகளின்  பாராட்டுக்களை பெற்றும்  வருகிறார் .

தனது யூ டிட்யூப் தளம் (www.youtube.com/maryamjazeem) மூலம் நாளாந்தம், இளம்  மற்றும் முதியோரை கவரும் வண்ணம் படிப்பினை ஊட்டும் பல்வேறு படைப்புக்களை வழங்கி வரும்  மர்யம்  ஜெஸீம் , அரசியல் மற்றும் கலை ,கணனி  வணிக  மற்றும் இன்னோரன்ன துறைகளில் தனது திறமைகளை வெளிக்காட்டியும் வருகிறார். 

 

2019 இல் ,ஐக்கிய ராஜ்யத்தில்   ‘’பிராக்சிட்’’ நிகழ்வின் தாக்கம் பற்றி தான் எழுதிய கடிதத்துக்கு  இங்கிலாந்தின் பிரதமர் அவர்களின்  பிரேத்தியக பாராட்டு கடிதத்தை பெற்றதுடன்     

‘’சர்வதேச  மாதிரி ஐக்கிய நாடுகள் சபை’’ 41வது கூட்டத்தொடரில் கடந்த ஜனவரி மாதம் அதி குறைந்த வயதில் இணையம் வழியாக   தற் துணிவோடு ,ஐக்கியநாடுகள்  சபையின் அமர்வுகலில் சிறப்பாக பங்கேற்றமைக்காக  சர்வதேச  ஐக்கிய நாடுகள்சபை  அமர்வின் தவிசாளர் மற்றும் பிரதிநிதிகளால்  வாய்மொழிபாராட்டு விருதை (Verbal Commendation Award) வென்றதுடன்   சர்வதேச ஐக்கிய நாடுகளின் மாதிரி பாராளுமன்றத்தி்ன்    பிரமுகர் அங்கத்துவத்தையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

 

 

இப்படி பல பின்னணிகளை கொண்டு நூல் விமர்சனங்கள்  மூலம் சர்வதேச புகழ் பெற்ற நூலாசிரியர்களின் 

பாராட்டை பெற்று வரும் சிறுமியான மர்யம் ஜெஸீம் இன் பெற்றோர்கள்  இலங்கையின் சாய்ந்தமருதை சேர்ந்தவர்கள்.  

 

மர்யம் ஜெஸீம் இன் தாயார்,புதிய திருமண பந்தத்தில் இணைந்து வாழ்ந்து வருகிறார் . இவர் ,  ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் எம் ஏ எம் முஸ்தபா மற்றும் சல்ஹா  பீபியின்   (பிரபல ஓய்வு பெற்ற  கல்வியலாளர் எம் எச் ஏ சமத்  அவர்களின் மதினியும் ,ஊடகவியலாளர் அஸ்ரப் சமத் இன்  சாச்சியுமானவர் ) புதல்வி ஸாதிகா (ஷிரீன்  ) ஆவார்.  

 

சாய்ந்தமருதை சேர்ந்த இவரது தந்தை ஜெஸீம். மர்ஹூம் அப்துல் ஹமீது மற்றும் ரஹ்மத் பீபியின்   புதல்வராவர் . தற்போது ஒன்பது வயதை உடைய மர்யம் ஜெஸீம் , தாய் விட்டுச் சென்றதிலிருந்து தந்தையின் அரவணைப்பில்  கடந்த ஐந்து வருட காலமாக  இங்கிலாந்தில் வசித்து வருகையில் மேற்கூறிய      அடைவுகளை சாதித்து  வருகிறார். 

 

மர்யம் ஜெஸீம் அவர்களை நாமும் வாழ்த்துவோம்!

 

 


No comments