நூர் ஷாஹிதா எழுதிய 'உதிர்ந்த இலைகள்' கவிதை நூல் Free Download
அத்துடன் நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து அழகிய முறையில் உரையாற்றிய தென்னிந்திய பிரபல எழுத்தாளர் லதா சரவணன் அவர்களது இணைவில் மட்டில்லா மகிழ்ச்சி அடைவதுடன், மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மற்றும் கௌரவ அதிதியாக பங்கேற்று சிறப்புரையாற்றிய இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்,
எப்.எச்.ஏ. ஷிப்லி ஆசிரியர் அவர்களுக்கும் ஆத்மார்த்தமான நன்றிகள்.
மேலும் பல சந்தர்ப்பங்களில் எம் தொழில் நுட்ப உதவியாளராக முன்னின்று செயற்படும் ஆசிரியர் குழு உறுப்பினரான பாத்திமா பின்த் சம்சுதீன் அவர்களுக்கும் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளவதோடு, இந் நூல் வெளியீட்டு நிகழ்வினை இனிமையான குரலில் சிறப்பாக தொகுத்து வழங்கிய றொசான் முஹம்மது அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.
அத்துடன் Sky தமிழ் உறுப்பினர்களிலிருந்தும்
சிறப்பான உரைகளை நிகழ்த்திய திருகோணமலை மற்றும் அனுராதபுர மாவட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்களாக தொடர்ந்தும் பணிகளை முன்னெடுத்து வரும் எச்.எம் ஹாஷிர் மற்றும்
அஸீர் அஸ்ரா பானு அவர்களுக்கும் மிகுந்த நன்றிகள்.
மேலும் இந் நூல் வெளியீட்டு நிகழ்வில் நேயர்களாக கலந்து கொண்டு, எம் வேண்டு கோளுக்கிணங்க, நூல் பற்றிய ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கிய இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து இணைந்து கொண்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
இந்நூல் வெளியீட்டு நிகழ்விற்கு தலைமை தாங்கி, சிறப்பான முறையில் வெற்றிகரமாக நிறைவு செய்ய,நெறிப்படுத்தி ஒழுங்கு செய்த துணிந்தெழு சஞ்சிகை பணிப்பாளர், பிரதம ஆசிரியர் ஜெ.எம் பாஸித் அவர்களுக்கும்
மிக்க நன்றிகள்.
மீண்டும் இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் முழுமையாக ஒத்துழைப்புக்களை வழங்கி செயற்பட்ட அனைத்து உள்ளங்களுக்கும் கனத்த நன்றிகள்.
No comments