Breaking News

ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு வெளியீட்டில் ஜவ்சன் அஹமட் எழுதிய கவிப்பொய்கை கவிதை நூல்













ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு வெளியீட்டில்
ஜவ்சன் அஹமட் எழுதிய கவிப்பொய்கை கவிதை நூல் வெளியீடு நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

அத்துடன் புத்தக வெளியீட்டு நிகழ்வில்,

பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து உரையாற்றிய ரஹ்மத் மன்சூர், கல்முனை மா நகரசபை பிரதிமேயர்.
தலைவர்- ரஹ்மத் பவுண்டேசன். அவர்களுக்கும் உளம் கனிந்த நன்றிகள்.

மற்றும் கௌரவ அதிதியாக உரையாற்றிய ஜெஸ்மி எம். மூஸா இலக்கிய விமர்சகர், சிரேஷ்ட ஊடகவியலாளர். தலைவர்: இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்.

தொழில்நுட்ப உதவியாளராக முன்னின்று செயற்பட்ட
ஆசிரியர் குழு உறுப்பினரான பாத்திமா பின்த் சம்சுதீன் அவர்களுக்கும் இதய பூர்வமான நன்றிகள்.

அத்தோடு புத்தக வெளியீட்டு
நிகழ்வை நடாத்துவதற்கு குறுகிய காலத்தில் அழைப்பை ஏற்று, அழகிய முறையில் தொகுத்து வழங்கிய ஷகீனா ஷாகிர் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.

மற்றும் இப் புத்தக வெளியீட்டு நிகழ்வினை சிறப்பான முறையில் நடாத்துவதற்கு முன்னின்று செயற்பட்டு,நெறிப்படுத்தி ஒழுங்கு செய்த Sky தமிழ் மற்றும் துணிந்தெழு சஞ்சிகை பணிப்பாளர், பிரதம ஆசிரியர் ஜெ.எம் பாஸித் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.

மேலும் இந் நிகழ்வில் சிறப்பு உரையினை சிறப்பாக வழங்கி, மனங்களை குளிரச் செய்த
றொஸான் முஹம்மட்
முகாமையாளர் ஸ்கை தமிழ் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்.

மேலும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்து சிறப்பான உரையினை ஆற்றிய சப்னா நஸீர் (நிறுவனர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிரதம ஆசிரியர், அக்கினிச் சிறகுகள். அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.

அத்தோடு இந் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு நல்லுரைகளை ஆற்றிய துணிந்தெழு சஞ்சிகை ஆசிரியர் குழு உறுப்பினர்களான
எம்.பஹ்த் ஜுனைட் ,
பாஷிரா ஜூனைடீன் அவர்களுக்கும் மிகுந்த நன்றிகள்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு உதவி ரஹ்மத் பவுண்டேசன் செயலாளர் சம்சுல் முனா அவர்களுக்கும் மிகுந்த நன்றிகள்.

மற்றும் இப் புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்.

1 comment:

  1. Maa shaa Allah super go ahead congratulation. May almighty Allah bless u may almighty Allah helps u achieve more achievements
    By Jasoora

    ReplyDelete