துணிந்தெழு சஞ்சிகை நடாத்தும் கவிதைப் போட்டி 2021

துணிந்தெழு சஞ்சிகை நடாத்தும்
கவிதைப் போட்டி 2021
● கவிதை தலைப்புக்கள்:
1.கொரோனாவின் இழப்புக்கள்.
2.வெறுமை காணா வறுமை.
3.துணிந்தெழு பெண்ணே!
[விரும்பிய ஏதாவதோர் தலைப்பில் மாத்திரம் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.]
● போட்டி நிபந்தனைகள்:
1. வயதெல்லை கிடையாது. அனைவரும் பங்கு பற்றலாம்.
2.ஆண்/பெண் இருபாலாரும் இப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
3.எந்த நாட்டில் வசிப்பவர்களாயினும் பங்கு பற்ற முடியும்.
4. கவிதைகள் 16 வரிகள் கொண்டதாகவும் ஒரு வரிக்கு 4 சொற்கள் கொண்டதாகவும் அமைதல் வேண்டும்.
5.உங்கள் கவிதைகளை அனுப்புமிடத்து எழுத்துப் பிழைகளின்றி அனுப்புதல் கட்டாயமானது.தவறும் பட்சத்தில் ஏற்றுக் கொள்ளப்படாமைக்கான வாய்ப்புக்கள் உண்டு.
6.உங்களால் அனுப்பி வைக்கப்படும் கவிதைகள் எமது முகநூலில் பதிவிடுவோம். அதில் கூடுதலான Like, Comment, Share பெறும் போட்டியாளர்களுக்கு 30 புள்ளிகளும், மீதி 70 புள்ளிகள் நடுவர்களாலும் தீர்மானிகப்படும்.
7.ஒருவர், போட்டிக்காக ஒரு கவிதை மாத்திரமே அனுப்ப முடியும்.
8.தேர்ந்தெடுக்கப்படும் வெற்றிக்குரிய கவிதைகள் துணிந்தெழு சஞ்சிகையில் பிரசுரிக்கப்படும்.
9.விதிமுறைகளுக்கு உட்படாத கவிதைகள் போட்டிக்குள் உள்வாங்கப்பட மாட்டாது.
10.உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கும் போது அதனுடன் பெயர்,முகவரி,தொலைபேசி இலக்கம்,புகைப்படம் என்பவற்றையும் அனுப்பி வைக்கவும்.
[பெண்கள் புகைப்படம் அனுப்புவது கட்டாயம் இல்லை.]
11.உங்கள் கவிதை உட்பட பெயர் விபரங்கள் குறிப்பிடுகையில் தமிழ் மொழியில் மாத்திரம் குறிப்பிட்டிருத்தல் கட்டாயமானது.
2021 செப்டம்பர் 30ம் திகதிக்கு முன் அனுப்பி வையுங்கள்
Whatsapp No: wa.me/+94757000791 or skytamil.lk@gmail.com
No comments