இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பிற்கான காரணம் வெளியானது
தற்காலத்தில் தொழிற்சாலைகளில் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காணக்கூடியதாக இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் தொழிற்சாலை பிரதானிகளுடன் கலந்துரைலயாடல்களை மேற்கொண்டு உரிய சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப நடத்திச் செல்ல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் சுகாதார பரிசோதகருடன் கலந்துரையாடி குறித்த தொழிற்சாலையை மூடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments