வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் சேவையை ஆரம்பித்தது சதொச.
சதொச நிறுனத்தின் ஊடாக அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே விநியோகித்து விற்பனை செய்யும் ஒழுங்குகள் தற்சயம் நாடளாவிய ரீதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கொவிட்-19 நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு தற்போது நடமாட்ட கட்டுப்பாடு நாடளாவ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களை மக்களின் வீடுகளுக்கே வியோகித்து விற்பனை செய்யும் நடைமுறை நாடெங்கும் பின்பற்றப்பட்டு வருகின்றது.
நாடளாவிய ரீதியில் பல தனியார் வணிக நிறுவனங்கள் இவ்வாறு பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணியை முன்னெடுத்து வருகின்றன.
அந்த வகையில், சதொச நிறுனத்தின் ஊடாக அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே வநியோகித்து விற்பனை செய்யும் ஒழுங்குகளை, நாடளாவிய ரீதியில் அரசாங்கமும் செய்துள்ளது.
அதன்படி சதோச நிறுவனத்தின் விநியோக விற்பனை சேவையை 1998 என்ற துரித எண்ணுக்கு அழைப்பினை மேற்கொள்வதனூடாக பெற்றுக் கொள்ள முடியும்.
No comments