Breaking News

மாத இறுதியில் பாடசாலைகள் திறக்கப்படுமா ?

எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் 4 கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் தகவல் பொய்யானது என கல்வியமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் எமது செய்திப்பிரிவு வினவியபோதே, அவர் இதனை தெரிவித்தார். 

தற்போதைய கொவிட் பரவல் நிலைமைக்கு மத்தியில், பாடசாலைகளை மீள திறப்பது குறித்து இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கல்வியமைச்சின் செயலாளர் இதன்போது விளக்கமளித்தார்.

No comments