இலங்கையில் மேலும் 46 கொவிட் மரணங்கள் பதிவு - முழு விபரம் இதோ
நாட்டில் நேற்று (06) கொவிட் மரணங்கள் பதிவாகவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும், மே 17 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 05 ஆம் திகதி வரை 46 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,742 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய,
மே 17 - 01 மரணம்
மே 22 - 01 மரணம்
மே 24 - 02 மரணங்கள்
மே 26 - 01 மரணம்
மே 30 - 02 மரணங்கள்
மே 31 - 06 மரணங்கள்
ஜூன் 01 - 03 மரணங்கள்
ஜூன் 02 - 09 மரணங்கள்
ஜூன் 03 - 03 மரணங்கள்
ஜூன் 04 - 15 மரணங்கள்
ஜூன் 05 - 03 மரணங்கள்
உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம்
• பால்
பெண்கள் - 23
ஆண்கள் - 23
• வதிவிடப் பிரதேசம்
வெலிகம, கிண்ணியா, வேயங்கொடை, களுத்துறை, ஹற்றன், அக்மீமன, கிந்தொட்ட, காலி, யக்கலமுல்ல, கொழும்பு 14, கொழும்பு 15, அகலவத்தை, மீரிகம, பிட்டகோட்டே, ரத்கம, நாகொட, ஹிக்கடுவை, உடதலவின்ன, அம்பேபுஸ்ஸ, மட்டக்களப்பு, அல்கம, பொரளை, நுவரெலியா, அவிசாவளை, நிட்டம்புவ, முறுதலாவ, அக்குறணை, கல்எலிய, கெலிஓயா, ஓபநாயக்க, வவுனியா, பம்பலப்பிட்டி, கம்பஹா, நாவுத்துடுவ, பசறை, பிலிமத்தலாவை, குருதெனிய, மற்றும் கம்பளை.
• அவர்களின் வயதெல்லை
வயது 20 இற்கு கீழ் - 00
வயது 20 - 29 - 01
வயது 30 - 39 - 01
வயது 40 - 49 - 04
வயது 50 - 59 - 06
வயது 60 - 69 - 07
வயது 70 - 79 - 15
வயது 80 - 89 - 11
வயது 90 - 99 - 01
வயது 99 இற்கு மேல் - 00
• உயிரிழந்த இடங்கள்
வீட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 13
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்தவர்கள் - 02
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தவர்கள் - 31
• உயிரிழந்தமைக்கான காரணங்கள்
கொவிட் தொற்றுடன் நுரையீரல் தொற்று, கொவிட் 19 நிமோனியா, நீரிழிவு, உயர் குருதியழுத்தம், இதய நோய், நாட்பட்ட சிறுநீரக நோய், தீவிர சிறுநீரக பாதிப்பு, முதுகெலும்பு பாதிப்பு, நுரையீரல் உயர் குருதியழுத்தம், தீவிர கொவிட் 19 நிமோனியா, குருதி நஞ்சானமை மற்றும் வலதுபக்க பக்கவாதம் போன்ற நிலைமைகள்.
No comments