Breaking News

போலியான செய்திகளை பதிவிட்ட இளைஞன் விளக்கமறியலில்

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் இணையதளங்கள் மீது ஸைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் போலியான செய்திகளை பதிவிட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரை நாளை (09) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டிருந்தான்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞனை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய சந்தர்ப்பத்தில் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments