Breaking News

எதிர்வரும் 7 ஆம் திகதி நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படுமா ? சாத்தியம் காணப்படுகிறது.

எதிர்வரும் 7 ஆம் திகதி நடமாட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பிரபல தொலைக்காட்சியில் இன்று (01) காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அடுத்த சில நாட்களில் மக்கள் செயற்படும் விதம், நடமாட்டக் கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கு முக்கிய காரணமாக அமையும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

No comments