நடு வீதியில் திடீரென தோன்றிய பாரிய குழி.
கம்பளை கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு அருகிலுள்ள வீதியில் நேற்றிரவு (25) திடீரென பாரியதொரு குழி ஏற்பட்டுள்ளது.
கண்டி மாவட்டம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இந்நிலையிலேயே மேற்படி அனர்த்தமும் இடம்பெற்றுள்ளது.
இதனால் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இன்று காலை சம்பவ இடத்துக்கு சென்ற பொறியியளாலர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கான காரணத்தை கண்டறிவதற்கான ஆய்வுகளும் இடம்பெற்று வருகின்றன.
No comments