Breaking News

கொரோனாவால் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி மரணம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க. துரைரெட்ணசிங்கம் காலமானார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது 80 ஆவது வயதில் இவ்வாறு உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments