Breaking News

இலங்கையில் நேற்றைய தினம் கொவிட் தொற்றாளர்கள் பதிவான பிரதேசங்கள்.

நேற்றைய தினம் இலங்கையில் 2,912 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர்களில் பெரும்பான்மையானோர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கொவிட் -19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இவர்களின் எண்ணிக்கை 490 ஆகும்.

இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திலிருந்து 322 பேரும், கண்டி மாவட்டத்திலிருந்து 261 பேரும் தோற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.

ஏனைய 1,809 பேரும் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளதாக கொவிட் 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய 11 மாவட்டங்களில் நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.

No comments