Breaking News

அரச பணியாளர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்க நடவடிக்கை.

அரச பணியாளர்களுக்கான இம்மாத சம்பளத்தை எதிர்வரும் 21ஆம் திகதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு பூராகவும் 21ஆம் திகதியிலிருந்து பயணத் தடைகள் விதிக்கப்பட்வுள்ள நிலையில், அரச பணியாளர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்கத் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசனைக்கமைய, இது தொடர்பான சுற்றுநிருபமானது, திறைசேறி நடவடிக்கை திணைக்களம் ஊடாக வௌியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments