முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி வைத்தியசாலையில் அனுமதி - காரணம் வெளியானது.
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (18) இரவு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக அசாத் சாலி கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments