சபாநாயகர் உத்தரவுக்கு கீழ்படிகிறேன் - ரிஷாட் பதியுதீன் நாளை பாராளுமன்றுக்கு பிரசன்னமாவார் - சரத் வீரசேகர.
பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், நாளைய தினம் பாராளுமன்றத்திற்கு பிரசன்னமாவார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சில் இன்று(17) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ரிஷாத் பதியுதீன் மட்டுமல்ல, வேறு எவரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கத்திருக்கும்போது, விசாரணைகள் நிறைவடையும் வரையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில், அவருக்கு வெளியே செல்ல ஒருபோதும் சந்தர்ப்பம் வழங்கமாட்டேன் என்றும் குறிப்பிட்டார்.
ஏனெனில், அவர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளியே செல்லும்போது, விசாரணைகளில் கேட்கப்படும் கேள்விகள் தொடர்பில், அவரினால் வெளியாட்களுக்கு அறியப்படுத்த முடியும். இதன் காரணமாக, எதிர்காலத்தில் கைதுசெய்யப்படவுள்ளவர்கள், நாட்டிலிருந்து வெளியேற முடியும்.
அவ்வாறில்லாவிட்டால், கேள்விகளுக்கு அவசியமான பதில்களை தயார்ப்படுத்த முடியும். எனவேதான், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வெளியே செல்வதற்கு தாங்கள் ஒருபோதும் சந்தர்ப்பம் வழங்குவதில்லை என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஆகையினால், விசாரணைகள் நிறைவடையும் வரையில், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வெளியே செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என சபாநாயகரிடம் தாம் கோரியதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், சபாநாயகர் தற்போது உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள் என்ற அடிப்படையில், சபாநாயகரின் உத்தரவுக்கு தாங்கள் கீழ்படிய வேண்டும்.
கஇதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் நாளைய தினம் பாராளுமன்றத்திற்கு பிரசன்னமாவார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
No comments