Breaking News

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,484 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார்.

அதனடிப்படையில் நேற்றைய தினம (31) 04 கொவிட் மரணங்கள் இடம்பெற்றதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.

மேலும், மே மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை கொவிட் நோயாளர்களில் 39 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மே 20 ஆம் திகதி 06 மரணங்களும், மே 21 ஆம் திகதி ஒரு மரணமும், மே 24 ஆம் திகதி ஒரு மரணமும், மே 25 ஆம் திகதி 02 மரணங்களும், மே 26 ஆம் திகதி 02 மரணங்களும், மே 27 ஆம் திகதி 06 மரணங்களும், மே 28 ஆம் திகதி 09 மரணங்களும், மே 29 ஆம் திகதி 06 மரணங்களும், மே 30 ஆம் திகதி 06 மரணங்களும், பதிவாகியுள்ளன.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,484 ஆக அதிகரித்துள்ளது.

No comments